• Oct 08 2024

தனுஷிடம் கதறியழுத சினேகா.. ஆறுதல் கூறிய செல்வராகவன்.. என்ன நடந்தது?

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

நடிகை சினேகா தனுஷிடம்  கதறி அழுததாகவும் ஆனால் இயக்குனர் செல்வராகவன் அதற்கு ஆறுதல் கூறியதாகவும் பத்திரிகையாளர் ஒருவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கேஆர் விஜயாவுக்கு பிறகு தமிழ் சினிமாவில் புன்னகை அரசி நடிகை என்று பெயர் பெற்றவர் சினேகா என்பதும் இவர் கமல், விஜய், சூர்யா உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் தனுஷ் நடித்த ’புதுப்பேட்டை’ திரைப்படத்தில் சினேகா விலைமாது கேரக்டரில் நடித்த நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது திடீர் என கதறி அழுதாராம்.



தன்னை பார்த்தால் விலைமாது மாதிரியா தெரிகிறது? தனக்கு ஏன் இப்படி ஒரு கேரக்டர் கொடுத்தீர்கள்? என்று தனுஷிடம் அவர் கதறி அழுதபோது செல்வராகவன் அவரை சமாதானப்படுத்தினாராம்.

இது வெறும் கேரக்டர் தான், இதை நினைத்து நீங்கள் அழுக வேண்டிய அவசியம் இல்லை, கண்டிப்பாக இந்த கேரக்டர் உங்களுக்கும் உங்கள் நடிப்புக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும் என்று ஆறுதல் கூறினாராம். இதையடுத்து தனுஷும் ஆறுதல் கூற அதன் பின்னர் தான் சமாதானமாகி அந்த கேரக்டரில் தொடர்ந்து நடித்ததாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் சமீபத்தில் ஊடகத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தனுஷ், செல்வராகவன் கூறியது போலவே அந்த கேரக்டர் சினேகாவுக்கு மிகவும் நல்ல பெயரை பெற்று கொடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement