• Jan 19 2025

திடீரென நின்று போன ‘பீஸ்ட்’ நடிகரின் திருமணம்.. காதலி கைவிட்டதால் சோகம்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் நடித்த நடிகரின் திருமணம் விரைவில் நடைபெற இருந்த நிலையில் திடீரென இந்த திருமணம் நின்று போனதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்திருந்தவர் நடிகர் ஷைன் டாம் சாகோ. இவர்  பிரபல மலையாள நடிகர் என்பதும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்த பிறகு விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துக்களை வெளியிட்டார் என்பதும் பலர் அறிந்ததே. கமல்ஹாசன், மம்முட்டி அளவுக்கு விஜய் சிறந்த நடிகர் கிடையாது என்றும் ’பீஸ்ட்’ படத்தில் சில காட்சிகள் நம்பத்தகுந்த வகையில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஷைன் டாம் சாகோ, தபீதா மேத்யூஸ் என்பவரை திருமணம் செய்த நிலையில் இந்த ஜோடிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. ஆனால் திடீரென மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்த ஷைன் டாம் சாகோ கடந்த சில மாதங்களாக வருடங்களாக தனுஜா என்பவரை காதலித்து வந்தார்.



இதனை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பின்னர் என்ன ஆனதோ தெரியவில்லை திடீரென திருமணம் நின்று போய் விட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷைன் டாம் சாகோ தெரிவித்துள்ளார். மேலும் தனது காதலி தனுஜாவின் புகைப்படங்களையும் அவர் இன்ஸ்டாவில் இருந்து நீக்கி உள்ளார்.

இதனை அடுத்து தற்போது தான் சிங்கிளாக இருப்பதாக கூறியுள்ள ஷைன் டாம் சாகோ டேட்டிங் ஆப் மூலம் பெண் தேடும் படலத்தில் இருப்பதாகவும் விரைவில் தனக்கேற்ற ஒரு பெண் கிடைக்கும் என்ற என் நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement