• Jan 18 2025

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் எஸ்.ஜே.சூர்யா பகிர்ந்த எக்ஸ் தள பதிவு !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி கதாநாயகனாக பரிணமித்த நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் தற்போதைய புது பரிமாணமான  வில்லன் கதாபத்திரங்கள் அவருக்கு "நடிப்பு அரக்கன்" எனும் பட்டத்தை வாங்கி கொடுத்துள்ளது. இந்தாண்டு வெளியாகியுள்ள அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களில் இடம்பிடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா தன்னை ஓர் முன்னணி நடிகராக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

Happy Birthday SJ Suryah

தற்போது தனுஷின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவான "ராயன்" திரைப்படம் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் விசில் மழையுடனும் வெற்றிக் கொண்டாட்டத்திடனும் திரையரங்குகளில் ஓடி வருகிறது.இந்நிலையில் "ராயன்" படத்தின் இறுதிப்பாடலான போகி பாடலில்  எஸ்.ஜே.சூர்யா நடனமாடும் வீடியோவுடன் ஒப்பீட்டு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார் ரசிகர் ஒருவர்.

Sjsurya Spyder GIF Sjsurya Spyder Pleasure Discover Share, 58% OFF

"ராயன்" பாடல் காட்சியில் எஸ்.ஜே.சூர்யா தலையை இருகைகளாலும் கோதும் சிறு கிளிப்பை 'ஸ்பைடர்' பட வில்லன்  எஸ்.ஜே.சூர்யா  மக்களின் துன்பத்தை கண்டு சிரித்தபடி தலையை கோதும் வீடியோவுடன் இணைத்து பதிவிட்டிருந்தார் ஒரு ரசிகர்.குறித்த பதிவை தனது எக்ஸ் தள பக்கத்தில் ஸ்மைலி ஸ்டிக்கருடன் பகிர்ந்திருந்தார் நடிகர் எஸ்.ஜே.சூர்யா.இப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement