தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்பட உலகின் ரசிகர்களுக்கான மிகப்பெரிய அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. “சீதாராமம்” பட இயக்குநர் ஹனு ராகவபுடி, பிரபாஸை முன்னணி கதாபாத்திரத்தில் வைத்து உருவாக்கும் புதிய படம் “பவுஸி” இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்புக்குப் பிறகு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஹனு ராகவபுடி பேட்டியில் கூறியதாவது, படத்தின் கதை “கர்ணன் பாண்டவர்களுடன் சேர்ந்திருந்தால் மகாபாரதப் போர் எப்படி மாறியிருக்கும்?” என்ற சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த கருத்து ரசிகர்களுக்கு தனித்துவமான கற்பனை உலகத்தைக் கொடுத்துள்ளது. மேலும் கதை எப்படி இருக்கும் என்ற சிந்தனையை ரசிகர்களுக்கு உருவாக்கியுள்ளது. அத்துடன், பிரபாஸின் ரசிகர்கள், அவரை மாபெரும் ஹீரோவாக மற்றொரு வரலாற்றுப் புனைகதையில் காணும் எண்ணத்தில் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
Listen News!