கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட சோக சம்பவத்தின் தாக்கம் உலகெங்கும் சோக அலையை ஏற்படுத்தியிருக்கும் இத் தருணத்தில் மீட்பு பணிகள் வேகமாக நடைபெற்றுவருவதுடன் வீடிழந்தவர்கள் மற்றும் மீட்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகளுக்கும் அனைத்து பக்கங்களிலும் இருந்து கிடைத்தவாறுள்ளன.
குறித்த நிவாரண பணிகளுக்காக கேரளா முதல்வர் நிவாரண நிதிக்கு அநேக திரைப்பிரபலங்கள் நிதியை வழங்கியிருக்கும் நிலையில் நயன்தாரா, விக்னசிவன் குடும்பத்தின் சார்பில் கேரளா முதல்வர் நிவாரண நிதிக்கு ரூபாய் 20 லட்சம் நிதி வழங்கப்பட்டிருக்கிறது.
இது குறித்தான அறிவிப்பில் நயன்தாரா, விக்னசிவனின் ரௌடி பிக்சர்ஸின் உத்தியோக பூர்வ இன்ஸாட பக்கத்தில் வெளியிட்டிருக்கும் கடிதத்தில் 'நமது அரசாங்கம், தன்னார்வத் தொண்டர்கள், மீட்புக் குழுக்கள் மற்றும் பல அமைப்புகளின் ஒருங்கிணைந்த பதிலைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.' என குறிப்பிட்டிருந்தனர்.
மேலும் அந்த கடிதத்தில் "மாண்புமிகு கேரள முதல்வர் அவர்களே,வயநாட்டில் ஏற்பட்ட சோகமான நிலச்சரிவை அடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு எங்கள் இதயம் செல்கிறது. சமூகம் அனுபவிக்கும் சீரழிவுகளும் இழப்புகளும் நெஞ்சைப் பிசைகின்றன.
மிகவும் தேவைப்படும் இந்த நேரத்தில், ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க ஒன்றிணைவதன் முக்கியத்துவத்தை நாங்கள் நினைவுபடுத்துகிறோம். ஒற்றுமையின் அடையாளமாக, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான உடனடி உதவிகளை வழங்கவும், மறுசீரமைப்புச் செயல்பாட்டில் உதவி செய்யவும் முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.20,00,000 (ரூபா இருபது லட்சம் மட்டும்) வழங்குகிறோம்.
நமது அரசாங்கம், தன்னார்வத் தொண்டர்கள், மீட்புக் குழுக்கள் மற்றும் பல அமைப்புகளின் ஒருங்கிணைந்த பதிலைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.மீண்டும் கட்டியெழுப்பவும் குணமடையவும் வலிமையிலும் இரக்கத்திலும் ஒன்றுபடுவோம்!" என குறிபிடப்படிருந்தது.
Listen News!