சினிமா உலகில் அனிமேஷன் திரைப்படங்கள் எப்போதும் சிறப்பு இடத்தை வகிக்கின்றன. அந்த வரவேற்பை மேலும் உயர்த்தும் வகையில், MOANA திரைப்படத்தின் Live-Action பதிப்பின் டீசர் தற்போது ரசிகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த டீசர் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டவுடன், ரசிகர்கள் சந்தோசத்தில் துள்ளிக் குதிக்கின்றனர்.
MOANA என்ற பெயர் உலகம் முழுவதும் பிரபலமான அனிமேஷன் திரைப்படமாகும். 2016 ஆம் ஆண்டு வெளிவந்த MOANA திரைப்படம் அதன் சிறந்த கதைக்களம், இசை மற்றும் அனிமேஷன் தொழில்நுட்பத்தால் ரசிகர்களிடையே ஒரு அடையாளமாக அமைந்தது.

அந்த திரைப்படத்தின் கதாபாத்திரங்கள், குறிப்பாக மோனா என்ற கதாநாயகி, அவரது துணிச்சல் மற்றும் சுயமரியாதையை காட்டும் விதம், உலகம் முழுவதும் மக்களுக்கு ஈர்ப்பை உண்டாக்கியது.
இந்நிலையில் இப்படத்தின் டீசர், முந்தைய அனிமேஷன் படத்தை நினைவூட்டும் வகையில் மற்றும் புதிய Live-Action கதையை சிறப்பாக காட்சிப்படுத்தும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.
Listen News!