தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் என பல மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை துளசி. இவர் அதிகமாக அம்மா ரோல்களிலேயே நடித்து அசத்தியிருப்பார். இவருடைய நடிப்பு எதார்த்தமாக காணப்படும்.
சுந்தர பாண்டியன், பண்ணையாரும் பத்மினியும், வெந்து தணிந்தது காடு, சர்கார் உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்து அசத்திருப்பார். பல ஆண்டுகளாக பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்களில் கூட துணை வேடங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில், நடிகை துளசி தான் திரைப்படங்களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார். இவர் தனது முடிவை இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார். மேலும் தனது வாழ்க்கையை சாய்பாபாவுக்கு அர்ப்பணிக்க போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முதலில் சாய்பாபாவின் கால்களின் படத்தை பதிவிட்டு, என்னையும் எனது மகனையும் காத்து வழிநடத்தும் என்று பதிவிட்டிருந்தார். அதன் பின்பு நான் மகிழ்ச்சியான ஓய்வை விரும்புகின்றேன், சாய் நாதருடன் அமைதியான எனது பயணத்தை தொடர்வேன். வாழ்க்கையை கற்றுக் கொள்ள உதவிய அனைவருக்கும் நன்றி என்று குறிப்பிட்டு இருந்தார்.
நான்கு தசாப்தங்களுக்கு மேலாக தனது திரை பயணத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, விஜய், மோகன் லால், கமல்ஹாசன் போன்ற பல முன்னணி நடிகர்களுடனும் திரையை பகிர்ந்துள்ளார். தற்போது அவருடைய இந்த முடிவிற்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களையும், ஆதரவையும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Listen News!