நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் சமீபத்தில் காந்தா படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இப்படம் தற்பொழுது வசூலில் சாதனை படைத்து வருகின்றது.

இந்நிலையில், பிஜேஷ் சமீபத்தில் செய்தியாளர்களுடன் பேசிய போது, “நான் நாகேஷ் பேரன்னு தெரியாம… காந்தா படத்தில என்ர நடிப்பைப் பார்த்திட்டு ‘இவரு நடிக்கிறது நாகேஷ் மாதிரி இருக்குன்னு சொல்லுறாங்க…
அந்த நேரத்தில நம்ம நடிப்பை பத்தி யாரும் பேசலையேன்னு கொஞ்சம் வருத்தமா இருக்கும். ஆனா, மக்கள் சொல்லுற வார்த்தைகள் மூலமா என் தாத்தா உயிரோட இருக்கார்னு மகிழ்ச்சியாக இருக்கு.” எனக் கூறியுள்ளார்.
பிஜேஷின் இந்த கருத்து ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது தாத்தா நாகேஷ் தமிழ் சினிமாவில் காமெடி மூலம் மிகப்பெரிய அடையாளத்தை உருவாக்கியவர். அத்தகைய கலைஞரின் பேரனான பிஜேஷ் தற்பொழுது தமிழ் திரையுலகில் தனது அடையாளத்தை உருவாக்கி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!