சமூக வலைத்தளங்களில் தனக்கான முத்திரையை பதித்தவர்களுள் ஒருவர் தான் பூர்ணிமா ரவி. இவர் யூட்யூப் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்தினார். தற்போது திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களுள் ஒருவர் தான் பூர்ணிமா ரவி. இவர் பிக் பாஸ் வீட்டில் மாயாவுடன் நெருக்கமாக காணப்பட்டதோடு பிரதீப் ஆண்டனி வெளியேறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர்களும் இவர்கள் இருவர் தான் என்ற கருத்தும் ரசிகர்கள் மத்தியில் காணப்பட்டது.
பிக் பாஸ் நிகழ்ச்சி இருந்து வெளியேறிய பூர்ணிமா ரவிக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்தன. அதன்படி ஒரு சில படங்களில் நடித்துள்ளார். மேலும் பல பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகின்றார்.

இந்த நிலையில்,பூர்ணிமா ரவி கொடுத்த பேட்டி ஒன்று தற்போது வைரல் ஆகி வருகின்றது. அதில் தான் யூட்யூப் மூலம் சம்பாதித்த பணத்தில் தான் சொந்தமாக வீடு ஒன்றை வாங்கியுள்ளேன் என்று கூறியுள்ளார். இது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
மேலும் வந்த பாதையை மறக்கக்கூடாது. நான் இப்போ வாடகை கட்டாம நிம்மதியா இந்த வீட்ல இருக்கின்றேன். இது எல்லாமே யூட்யூப் மூலம் கிடைத்தது தான் என்று தெரிவித்துள்ளார்.
Listen News!