• Nov 19 2025

என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள்.? சோசியல் மீடியா அவதூறால் மனம் நொந்த கயாடு லோஹர்!

subiththira / 17 hours ago

Advertisement

Listen News!

தமிழ் திரைப்படத்துறையில் சமீப காலங்களில் தன்னுடைய தனித்துவமான நடிப்பு மற்றும் அழகின் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்று வரும் நடிகை கயாடு லோஹர், சோசியல் மீடியாக்களில் பரவும் அவதூறு கருத்துகள் குறித்து மனம் நொந்த நிலையில் தனது உணர்வுகளைப் பகிர்ந்துள்ளார்.


இன்றைய சமூக வலைத்தள சூழலில் பிரபலங்கள் பாராட்டுகளையும், விமர்சனங்களையும் சந்திப்பது சாதாரணமான ஒன்று என்றாலும், பல சமயம் விமர்சனம் என்ற பெயரில் வரும் அவதூறு, பொய் செய்திகள், தேவையற்ற கிண்டல் போன்றவை அவர்களின் மனநிலையை பாதிக்கக்கூடும். அதேபோல் கயாடு லோஹரும் அவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை திறந்த மனதுடன் பேசியுள்ளார்.

கயாடு கூறியதாவது, “சோசியல் மீடியாக்களில் என்னைப் பற்றிப் பரவும் அவதூறு கருத்துகள் மிகவும் வேதனை அளிக்கிறது. ஒரு கண்ணியமான பின்னணியில் இருந்து வருபவள் நான். பின்னால் பேசுபவர்கள் பற்றி கவலைப்படவில்லை என்றாலும் ஆழ் மனதில் அது உறுத்திக் கொண்டே இருக்கும்.”


அத்தோடு, தனது கனவை நோக்கி எந்த தவறும் செய்யாமல் ஓடும் நிலையில், தன்னை ஏன் சுட்டிக்காட்டி குறைசொல்லுகிறார்கள் என்பது பற்றியும் அவர் கேள்வி எழுப்பினார். அதாவது, “எந்த தவறும் செய்யாமல் கனவை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் என்னை ஏன் டார்க்கெட் செய்கிறார்கள்?” என்று கேட்டிருந்தார்.

இந்தக் கேள்வி கயாடு மட்டுமல்லாமல் பல இளம் நடிகைகளின் மனநிலையை பிரதிபலிக்கிறது. திரைப்படத் துறையில் பெண்கள் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைகள் ஒருபோதும் வெளியில் முழுமையாக தெரியாது. சிலர் தங்கள் பயணத்தில் உறுதியுடன் செயல்படும் போது, சமூக வலைத்தளங்களில் விமர்சனம், டிரோல்கள் போன்றவை மன உளைச்சல் அளிக்கக் கூடியதாக காணப்படுகின்றது. 

Advertisement

Advertisement