சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில் , மீனா தான் சமைத்த உணவுகளை வீட்டாருக்கு பரிமாறும் போது ரோகிணியும் ஹெல்ப் பண்ணுகிறார். ஆனால் விஜயா மீனா எல்லாம் செய்வா, நீ வந்து சாப்பிடு என்று சொல்லவும், இல்லை நான் அவருக்கு உதவி செய்கின்றேன் என்று ரோகிணி சொல்கின்றார்.
இதை கேட்ட சுருதி, மீனா தானே எப்போதும் பரிமாறுவாங்க.. நீங்க என்ன புதுசா அவங்களுக்கு ஹெல்ப் பண்றீங்க என்று கேட்கின்றார். அதன் பின்பு அனைவரும் சாப்பிடும் போதும் சாப்பாட்டில் உப்பு, புளி, காரம் எல்லாம் வித்தியாசமாக இருக்க யாராலும் சாப்பிட முடியாமல் போகின்றது.
இதனால் மீனாவுக்கு என்ன நடந்தது என்று எல்லாரும் விசாரிக்கின்றார்கள். இதன் போது அண்ணாமலை உடம்பு சரியில்லையா என்று கேட்க, மீனாவுக்கு மனசு தான் சரியில்லை போல.. ஏதோ என்னிடம் மறைக்கின்றார்.. என்ன விஷயமாக இருந்தாலும் சொல்லு.. உனது முகத்தை பார்த்தாலே எல்லாம் தெரிகிறது என்று மீண்டும் மீண்டும் முத்து கேட்க, அவர் ஒன்றும் இல்லை என்று மறுத்து விடுகின்றார்.
அதன்பின்பு கிச்சனுக்கு சென்று நான் உண்மையைச் சொல்ல போகின்றேன் என்று ரோகிணியிடம் மீனா சொல்ல , அவர் நீங்க உண்மைய சொன்னா நான் இப்பொழுதே எனது கையை அறுத்துக் கொள்வேன் என்று மிரட்டுகிறார்.

இதனால் மீனா தனியாகச் சென்று மாடியில் அழுது கொண்டிருக்க, அங்கு சென்ற ரோகிணி எதற்காக இப்படி அழுகுறீங்க என்று கேட்க, உனக்கு இரண்டு வருஷமா எல்லாரையும் ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றாய். ஆனால் என்னால் அப்படி இருக்க முடியவில்லை என்று சொல்லுகின்றார்.
இதைக் கேட்ட ரோகிணி, எனது வாழ்க்கையில் உண்மையாக என்ன நடந்தது என்று தெரிந்திருந்தால் நீங்கள் இப்படி பேசி இருக்க மாட்டீங்க என்று தன்னுடைய ஃபிளாஷ்பேக் கதையை சொல்லுகின்றார்.
அதில் தான் படித்துக் கொண்டிருக்கும் போது எங்களுடைய வீட்டில் ரொம்ப கஷ்டம். கடன்காரர்கள் அதிகமாக தொல்லை பண்ணுவார்கள். நான் படித்து அவற்றை அடைக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் என்னுடைய அப்பா வேலை செய்யும் இடத்தில் உள்ள முதலாளியின் தம்பியை எனக்கு திருமணம் முடிக்க கேட்டார்கள்.
அவருக்கு என்னை விட 15 வயது வித்தியாசம். இதனால் நான் மறுத்தேன். ஆனாலும் எனது அப்பா அவரை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தார். எனக்கு திருமணம் நடந்தது. அடுத்த நாள் எக்ஸாம் இருந்தது. அதற்காக நான் படித்தேன். ஆனால் எனது கணவர் எனது புத்தகங்களை தூக்கி எறிந்து என்னை படிக்க விடாமல் தடுத்தார்.
மேலும் என்னுடைய அனுமதி இல்லாமல் என்னை தொட்டார். அவருக்கு அதன் பின்பு தான் குடிப்பழக்கம், போதைப் பழக்கம் இருப்பது தெரிய வந்தது. பின்பு நான் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. ஒரு கட்டத்தில் அவர் மது போதையில் வந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தார். மூன்றே மாதங்களில் எனது வாழ்க்கை முடிந்தது.
அதன் பின்பு அவருடைய குடும்பத்தினர் 5 லட்சம் ரூபாய் கொடுத்து, இனிமேல் இந்த குடும்பத்துக்கும் உங்களுக்கும் சம்பந்தமில்லை என்று என்னை விரட்டி விட்டார்கள் என்று தனது கதையை கூறுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!