சன் டிவியில் ஒளிபரப்பான வானத்தைப்போல சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை தான் மான்யா ஆனந்த். இவர் கயல், அன்னம், மருமகள் போன்ற சீரியல்கள் நடித்து மக்களிடையே நல்ல கவனம் பெற்றார். தற்போது தனது பிட்னஸ் விஷயங்களுக்காக ஜிம்முக்கு சென்று கவனம் செலுத்தி வருகின்றார்.
இந்த நிலையில், தன்னுடைய சீரியல் மற்றும் திரைத்துறை அனுபவங்களை குறித்து அவர் கொடுத்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. அதில் தனுஷின் மேனேஜர் தன்னை தனுஷ் படத்தில் நடிக்க அட்ஜஸ்ட்மென்ட் பண்ணச் சொல்லிக் கேட்டதாக குற்றம் சாட்டி உள்ளார். இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி அவர் கூறுகையில், தனுஷின் மேனேஜர் ஷ்ரேயஸ் என்பவர் எனக்கு அழைப்பை ஏற்படுத்தினார். தனுஷ் படத்தில் நீங்க நடிக்க முடியுமா என்று கேட்டார்.

மேலும் அப்படி என்றால் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்றார். நான் அது எல்லாம் பண்ண மாட்டேன் என்று கூறினேன். அதற்கு தனுஷ் என்றாலும் அட்ஜஸ்ட்மென்ட் பண்ண மாட்டீங்களா என்று கேட்டார், நான் தனுஷாக இருந்தாலும் அட்ஜஸ்ட்மென்ட் பண்ண மாட்டேன் என்று உறுதியாக கூறினேன்.
அதேபோல அண்மையில் மீண்டும் எனக்கு தனுஷ் படத்தின் ஸ்கிரிப்ட் அனுப்பி, ஷூட்டிங் ஸ்கிரீன்ஷாட் அனுப்பி நடிக்க வேண்டுமா என்று கேட்டார். ஆனால் நான் அந்தக் கதையை கூட படிக்கவில்லை. நாங்கள் நடிகர்கள் வேறு தொழில் செய்பவர்கள் இல்லை என்று தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார். தற்போது இவர் தனுஷ் பற்றி கூறிய விடயம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!