• Nov 19 2025

சீடனின் உண்மையான அன்பு… ஆசிரியருக்காக ரஜினி வெளிப்படுத்திய நன்றி உணர்வு.! என்ன தெரியுமா.?

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா உலகில் இன்று ஒரு துயரச் செய்தி பரவி வருகிறது. தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை நடத்தும் திரைப்படப் பயிற்சி கல்லூரியில் பலருக்கும் நடிப்பு பயிற்சி வழங்கிய மூத்த பயிற்சி ஆசிரியர் கோபாலி (92) இன்று காலை இயற்கை எய்தினார்.


கோபாலி அவர்கள் தமிழ் சினிமாவின் பல முக்கிய நடிகர்களுக்கு ஆரம்பத்தில் நடிப்பு பயிற்சி கற்றுக் கொடுத்தவர். குறிப்பாக உலகநாயகன், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பயிற்சி பெற்ற போது, அவர்களுக்கு நடிப்பு பயிற்சி சொல்லிக் கொடுத்த ஆசானாகத் திகழ்ந்தார்.


கோபாலி அவர்களின் மறைவுச் செய்தி வெளியான சில மணி நேரங்களில், நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி உள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றது. அத்துடன், ரஜினி ரசிகர்கள் இதனை ஷேர் செய்து வருகின்றனர். 

Advertisement

Advertisement