• Nov 19 2025

மீண்டும் ரசிகர்களைக் கவரவரும் "ப்ரண்ட்ஸ்”.. புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு.!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படங்களில் ஒன்றான “ஃப்ரண்ட்ஸ்”, பல ஆண்டுகள் கழித்து மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. விஜய், சூர்யா, தேவயானி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்த இந்த படம், இந்த மாதம் 21ம் தேதி ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது.


இப்படத்தை மறுபடியும் பெரிய திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் வகையில், படக்குழு புதிய ட்ரெய்லர் ஒன்றையும் தற்பொழுது வெளியிட்டுள்ளது. அதன் காட்சிகள் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகின்றன.

2001-ல் வெளியான “ஃப்ரண்ட்ஸ்” படம், அப்போது பாக்ஸ் ஆபிஸில் மிகப் பெரிய ஹிட்டாக இருந்தது. நண்பர்கள் உறவு, உணர்ச்சி, நகைச்சுவை போன்ற அம்சங்கள் கலந்த இப்படம், குடும்ப ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.


இதன் காரணமாக, படத்தை மீண்டும் திரையரங்கில் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக ரசிகர்கள் வட்டாரங்களில் இருந்து வந்தது. இப்போது, அந்த ஆசை நிறைவேறியுள்ளதால், சமூக வலைத்தளங்களில் #FriendsReRelease #VijaySuriya trends ஆகிய ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வருகின்றன.

Advertisement

Advertisement