தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் தேவா, கடந்த சில தசாப்தங்களாக திரை உலகில் பல ஹிட் பாடல்களைக் கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் தற்பொழுது விஜய், அஜித், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் பணியாற்றிய அனுபவங்களை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார். இந்நிலையில் அவர் கூறிய கருத்துகள் தற்போது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தேவா பேட்டியில் கூறியதாவது, " விஜய் , அஜித்துக்கும் பல ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளேன். ஆனா, அவங்க ரெண்டு பேரும் கம்போசிங்கெல்லாம் வரமாட்டாங்க... நான் ரொம்ப பிராங்கா சொல்றேன்... என் பாட்டை எந்த ஹீரோவும் பாராட்ட மாட்டாங்க. ஆனா, ரஜினி சார் ஒருத்தர் தான் போன் பண்ணிப் பாராட்டுவாரு... நானும் பார்த்தேன். சரி, மத்த நடிகர்களுக்கு அந்தப் பழக்கம் இல்லன்னு விட்டுட்டேன்." என்று தெரிவித்துள்ளார்.
இது திரை உலகில் பல இசையமைப்பாளர்களுக்கும் உண்மை அனுபவமாக இருக்கலாம், ஆனால் தேவா இதை வெளிப்படையாகச் சொல்லியிருப்பது ரசிகர்களை வியக்கச் செய்யும் விதமாக உள்ளது. அவர் குறிப்பிட்டது போல, சில முன்னணி நடிகர்கள் பாட்டுக்கு நேர்மையாக அங்கீகாரம் தர மாட்டார்கள்; அது ஒரு விதமான தனிப்பட்ட பழக்கம் போலவே இருக்கிறது.
இசையமைப்பாளர் தேவா தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் பல ஹிட் பாடல்களை எழுதி, ரசிகர்களின் மனதில் நிலைத்தவர். விஜய் மற்றும் அஜித் போன்ற ஹீரோக்களுக்கு பாடல்கள் கொடுத்தாலும், அவர்களிடம் நேரடியாக பாராட்டு கிடைக்காதது தேவாவிற்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!