விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் என்ற கேரக்டரில் நடித்து வருபவர் தான் நடிகர் ஸ்ரீ தேவா. இவர் இந்த சீரியலில் முக்கியமான கேரக்டராக காணப்படுகின்றார். இவருக்கு என்று தற்போது மிகப்பெரிய ரசிகர் கூட்டம் காணப்படுகிறது.
சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகனுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் கொடுப்பது மனோஜ் என்ற கேரக்டருக்கு தான். இவர் இந்த சீரியலில் அதிகம் படித்தவராக காணப்பட்டாலும் முட்டாள் குணம் கொண்டவராக சித்தரிக்கப்படுகின்றார். இதனால் பல சிக்கல்களிலும் மாட்டிக் கொள்கிறார்.
தற்போது ரோகிணிக்கு, ஏற்கனவே திருமணம் ஆகி அவருடைய குழந்தை தான் கிரிஷ் என்ற விஷயம் மீனாவுக்கு தெரிய வருகிறது. ஆனால் இதனை வெளியில் சொல்ல வேண்டாம் என்று ரோகிணி கெஞ்சுகின்றார். மேலும் அவருடைய பழைய வாழ்க்கை பற்றிய ரகசியத்தையும் சொல்லி உள்ளார். இதனால் மீனா ரோகிணி மீது இரக்கம் காட்டுகின்றார்.

எனினும் இந்த விடயம் மனோஜ்க்கு தெரிய வரும்போது அவர் எப்படியான முடிவை எடுக்கப் போகின்றார் என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகிறது . அதேபோல தற்போது மீனாவுக்கு சப்போர்ட்டாக சில விஷயங்களை செய்கின்ற ரோகிணி, தன்னை பாதுகாக்க அவரை என்ன வேண்டும் என்றாலும் செய்வார் என்ற கருத்தும் காணப்படுகிறது.
இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் கேரக்டரில் நடிக்கும் நடிகர் ஸ்ரீ தேவா ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு, ஒரு கவிதை ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில் தன்னுடைய பழைய கண்ணாடி விடை பெறுவதாகவும், புதிய கண்ணாடியுடன் வருகை பற்றியும் எமோஷனலாக பதிவிட்டுள்ளார் .
Listen News!