தெலுங்கு திரைப்பட உலகின் பிரபலமான இயக்குநர் ராஜமெளலி, தனது புதிய படத்தால் தற்பொழுது திரையுலகை அதிர வைத்திருக்கிறார். நடிகர் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள புதிய படத்திற்கு சமீபத்தில் ‘வாரணாசி’ என பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் டைட்டில் வெளியீட்டு விழாவிற்கு மட்டும் 25 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகி, ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ராஜமெளலி இயக்கும் இந்த படம், அவர் இயக்கிய முன்னணி திரைப்படங்களான பாகுபலி போன்ற வெற்றி பெற்ற படங்களைப் போல இருக்கும் என மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. படக்குழு இதுவரை கதை, கேரக்டர் விவரங்கள், திரைக்கதை சார்ந்த தகவல்களை ரகசியமாக வைத்துள்ளது.

அந்த நிலையில், டைட்டில் வெளியீட்டு விழாவிற்கு மட்டுமே 25 கோடி ரூபாய் செலவாகி இருப்பது, திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!