தெலுங்கு திரைப்பட உலகில் இந்திய சினிமாவை உலக அளவில் எடுத்துச் செல்லும் முக்கியமான பெயராக உள்ள இயக்குநர் ராஜமெளலி, சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற ‘வாரணாசி’ (Varanasi) படத்தின் டைட்டில் வெளியீட்டு விழாவில் அனுமன் குறித்து சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அந்தக் கருத்து தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

விழாவில் பேசும் போது, தந்தையின் நம்பிக்கைகள், மனைவியின் பக்தி வழக்கங்கள் ஆகியவற்றைப் பற்றி மனதார கூறிய ராஜமெளலியின் இந்த உரை, எதிர்பாராத விதமாக புதிய விவாதத்திற்கு வழி வகுத்திருக்கிறது.
அந்த நிகழ்ச்சியில் ராஜமெளலி, “எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. அனுமான் தான் என்னை வழி நடத்துகிறார் என தந்தை கூறுவார். என் மனைவியும் அனுமான் பக்தை. அனுமனை தனது நண்பர் போல நினைத்து அவருடன் பேசிக்கொண்டிருப்பார். அவர்களை நினைத்தால் எனக்கு கோபம் தான் வரும்.” என்றார்.

அவரின் இந்த கருத்து, அவர் குடும்பத்தில் உள்ள மத நம்பிக்கை குறித்து ஓர் விரிவான விளக்கமாக இருந்தாலும், சில அமைப்புகள் இதனைக் கண்டிக்கின்றன.
இந்த உரை சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியதால், பல மத அமைப்புகள் மற்றும் அனுமான் பக்தர்கள் அதில் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதனிடையே, ராஷ்டிரிய வானர சேனா எனப்படும் ஒரு அமைப்பு, ராஜமெளலியின் கருத்து “அனுமனை அவமதிக்கும் வகையில் உள்ளது” எனக் கூறி, தெலுங்கானா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
Listen News!