சிறக்கடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில் , தனது முதல் கல்யாணத்தின் போது நடந்த அத்தனை விஷயங்களையும் மீனாவிடம் சொல்லுகின்றார் ரோகிணி.மேலும் அதற்குப் பிறகு தான் தனியாக வாழ முடிவெடுத்து, படித்து குழந்தையையும் பார்த்ததாகவும் சொல்லுகின்றார்.
அதன் பின்பு பாலர் வேலைக்குச் சென்றதாகவும் அங்கு ஒருவர் தன்னை விரும்பியதாகவும், அவரிடம் உண்மையை சொல்லும் போது அவர் தன்னை ஏற்றுக்கொள்ள தயாரானார், ஆனால் க்ரிஷை ஏற்றுக்கொள்ள மறுத்தார். அதன் பின்பு தனியாக வாழ்வதற்கான பல சவால்களை எதிர்கொண்டேன். அப்போதுதான் தனியாக வாழ முடியாது என்று உணர்ந்தேன்.
இதை தொடர்ந்து மனோஜை சந்தித்தேன். அவர் எனக்கு சரியாக இருப்பார் என்று தோன்றியது. ஆனாலும் அவரிடம் உண்மையை சொன்னால் அவரும் என்னை விட்டு சென்று விடுவார் என்ற பயத்தில் என்னுடைய வாழ்க்கையை காப்பாற்றுவதற்காக இப்படி ஒரு பொய் சொன்னேன். ஆனால் நான் சொன்ன ஒவ்வொரு பொய்யின் பின்பும் ஒரு நியாயம் உள்ளது என்றார்.

இதையெல்லாம் கேட்ட மீனா, உனக்கு வாழ்க்கையில் நடக்கக்கூடாதது எல்லாம் நடந்து இருக்கு தான். ஆனால் அதற்காக இப்படி ஒரு குடும்பத்தை ஏமாற்றுவது பாவம். உன்னுடைய பொய்க்காக என்னுடைய நிம்மதியை எடுத்து விட்டாய் என்று சொல்லிச் செல்கின்றார்.
அதன் பின்பு இரவெல்லாம் மீனா தூங்காமல் ரோகிணி பற்றி நினைத்துக் கொண்டிருக்க, முத்து எழுந்து என்ன நடந்தது? என்னிடம் மறைக்கின்றாய் என்று கேட்கின்றார். ஆனாலும் அவரை தூங்குமாறு அதட்டி பேசுகின்றார் மீனா.
அடுத்த நாள் மனோஜ் கோட் சூட் போட்டு ஆபிசுக்கு ரெடியாக, எல்லாரும் அவரைப் பார்த்து தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கின்றனர். இதன்போது மனோஜ் மீனாவை இழுத்து பேச, ரோகிணி அவருக்கு ஆதரவாக பேசுகின்றார். இதனால் ஸ்ருதி என்ன உங்களுக்கு ரோகிணி சப்போர்ட் பண்றாங்க? என்று சந்தேகத்தை எழுப்புகின்றார். இதுதான் இன்றைய எபிசோட் .
Listen News!