• Jan 09 2026

நயன்தாராவின் 41வது பிறந்தநாள் ஸ்பெஷல்.! புதிய பட அப்டேட்டை வீடியோவுடன் வெளியிட்ட படக்குழு

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட உலகின் “லேடி சூப்பர் ஸ்டார்” என போற்றப்படும் நடிகை நயன்தாரா, இன்று தனது 41வது பிறந்தநாளை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார். சமூக வலைத்தளங்களில் காலை முதலே #HappyBirthdayNayanthara என்ற ஹாஷ்டாக் டிரெண்டாகி, உலகம் முழுவதிலிருந்து ரசிகர்கள் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.


இந்நிலையில், நயன்தாராவின் பிறந்தநாளை மேலும் சிறப்பாக்கும் வகையில் மிகப்பெரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தெலுங்கு நட்சத்திரம் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் அவரது 111வது படமான ‘என்பிகே111’ படத்துக்கு நயன்தாரா அதிகாரபூர்வமாக இணைந்துள்ளார் என்று படக்குழு அறிவித்துள்ளது.


நயன்தாரா ‘என்பிகே111’ படத்தில் இணைந்ததை கொண்டாடும் வகையில், படக்குழு அவரது பர்ஸ்ட் லுக் வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைத்தளங்களில் வைரலாகி, லட்சக்கணக்கான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.

பர்ஸ்ட் லுக்கில் நயன்தாரா ஒரு ஸ்டைலிஷ், மற்றும் வித்தியாசமான லுக்கில் தோன்றியுள்ளார். அவர் படத்தில் எப்படியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை படக்குழு ரகசியமாக வைத்துள்ள நிலையில், அந்த லுக் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Advertisement

Advertisement