• Nov 19 2025

நீ பிறந்த தினம்.. வரம்..!ரொம்ப காஸ்ட்லியான காரை கிப்ட் பண்ணிய விக்கி.. வைரல் க்ளிக்ஸ் இதோ

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான ஐயா படத்தின் மூலம்  தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர்தான் நயன்தாரா. இவர் அந்த படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்தார்.  தனது முதலாவது  படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து இன்று  லேடி சூப்பர் ஸ்டார் ஆக கொடி கட்டி பறக்கின்றார். 

இவர் டைரக்டர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். தற்போது  தான் செல்லும் இடமெல்லாம்  தனது  குடும்பத்தினரோடு பயணம் செய்வதையும்,  ஷூட்டிங் செல்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார் நயன்தாரா. 

தற்போது திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமில்லாமல், சொந்தமாக பல தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றார். சமீபத்தில் அழகு சாதன பொருட்களின் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு  தங்களுடைய ஏற்றுமதியை செய்து வருகிறது. 


தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி என பலமொழிகளிலும் நடித்து பான் இந்திய நாயகியாகவும் ஜொலித்து வருகின்றார். இவர் நேற்றைய தினம் தனது 41வது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தார். அவருக்கு பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். 


இந்த நிலையில், நடிகை நயன்தாராவின் பிறந்தநாளுக்கு  அவருடைய கணவரான இயக்குநர் விக்னேஷ் சிவன்  புதிய கார் ஒன்றைப் பரிசளித்துள்ளார்.  அதன்படி  நயன்தாராவுக்கு rolls-royce  என்ற காரை  பரிசளித்துள்ளார். தற்போது இதன் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றன. 


Advertisement

Advertisement