விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன், கடந்த அக்டோபர் ஐந்தாம் தேதி ஆரம்பிக்கப்பட்டு இன்று 44 வது நாளில் காலடி பதித்துள்ளது. இன்றைய தினம் வெளியான ப்ரோமோவில் பிக் பாஸ் வீடு மூன்றாக பிரிக்கப்பட்டு ஹவுஸ்மேட்ஸ் கலகலப்பாக காணப்படுகின்றார்கள்.
அதன்படி இன்றைய தினம் வெளியான முதலாவது ப்ரோமோவில் , 'வீக்லி டாஸ்க்' விக்ரமால் வாசிக்கப்படுகிறது. அதில் பிக் பாஸ் வீடு 3 டீம் ஆக பிரிக்க வேண்டும் என்று கிச்சன் டீம், கிளீனிங் டீம் மற்றும் வாஷ்ரூம் டீம் என மூன்றாக போட்டியாளர்கள் பிரிக்கப்படுகின்றனர்.
அதன்படி கிச்சன் டீமில் வியானா, பார்வதி, திவ்யா, கனி மற்றும் சாண்ட்ரா ஆகியோர் காணப்படுகின்றனர். கிளீனிங் டீமில் விக்ரம், கம்ருதீன், பிரஜின், சுபிக்ஷா மற்றும் கெமி ஆகியோர் காணப்படுகின்றார்கள்.

இறுதியாக வாஷ்ரூம் டீமில் அமீத், வினோத், ரம்யா ஜோ, சபரி, அரோரா மற்றும் எப்ஜே ஆகியோர் காணப்படுகின்றார்கள். இதில் எந்த டீம் அதிகமான பாயிண்ட்ஸை வாங்குகிறார்களோ அவர்கள் அனைவரும் அடுத்த வாரம் இடம்பெறும் வீட்டு தல போட்டியில் பங்குபெறும் வாய்ப்பை பெறுவார்கள் என கொடுக்கப்பட்ட டாஸ்கை வாசித்து முடிக்கின்றார் விக்ரம். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.
Listen News!