பிக்பாஸ் சீசன் 9 கடந்த வாரங்களில் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் கலந்து கொண்ட வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், சமீபத்தில் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இவரது வெளியேறல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை உருவாக்கியது. இதற்கு பின்னர் அவர் கலந்து கொண்ட நேர்காணல் வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

வீடியோவில் திவாகர், “நான் பிக்பாஸ் உள்ள போனதற்கு காரணம் என்னுடைய நடிப்புத் திறனை வெளியில் காட்ட வேண்டும் என்று தான். நிறைய பேர் கிட்ட ரீச் ஆகணும் என்று தான் போனேன்.” என்றார்.
மேலும், நடுவர் ஜாக்லின் திவாகரைப் பார்த்து பிக்பாஸ் வீட்டில் எத்தனை நாள் இருக்க வேண்டும் என நினைத்தீர்கள் என்று கேட்டார்.

இதற்குத் திவாகர், “நான் 60 நாள் இருக்கனும் என்று நினைத்தேன். என்னால் பிக்பாஸ் வீட்டிற்குள் விளையாட்டில் பெருசா ஈடுபட முடியவில்லை. அதனால் தான் வெளியேறி இருப்பேன்.”என்று கூறியிருந்தார். திவாகரின் இந்த நேர்காணல் வீடியோ இணையத்தில் பரவிய பின்னர், இது வைரலாகி பலரைக் கவர்ந்துள்ளது.
Listen News!