தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்கள் காத்திருந்த "காந்தா" படம், வெளிவந்த முதல் நாளிலேயே box-office-ல் அதிரடி வசூல் சாதனையை படைத்திருந்தது. துல்கர் சல்மான், பாக்கியஸ்ரீ போர்ஸ், சமுத்திரக்கனி மற்றும் ராணா டக்குபதி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம், கடந்த நவம்பர் 14 அன்று திரையரங்குகளில் வெளியானது.

சமீபத்திய தகவல்களில், காந்தா படம் வெளியான முதல் நாளில் மட்டுமே ரூ. 10 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இது திரையரங்குகளில் ரசிகர்களின் பெரும் ஆதரவை சுட்டிக்காட்டுகிறது. குறைந்த காலப்பகுதியில் இப்படம் பெற்ற வரவேற்பு படக்குழுவினருக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
படம் தற்போது மொத்தமாக ரூ. 27 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் காந்தா தற்போது 2025ம் ஆண்டின் முக்கிய ஹிட் படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

காந்தா படத்தில் துல்கர் சல்மான் தனது நடிப்பால் ரசிகர்களை ஈர்த்துள்ளார். பாக்கியஸ்ரீ போர்ஸ், சமுத்திரக்கனி மற்றும் ராணா டக்குபதி ஆகியோர் தங்களது திறமையான நடிப்பால் அசத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!