விஜய் டிவியில் பிரபலமான நாஞ்சில் விஜயன் மீது சமீபத்தில் திருநங்கை வைஷ்ணவி குற்றச்சாட்டை முன் வைத்தார். அவர் தன்னை காதலித்ததாகவும், தன்னை திருமணம் செய்து கொள்வதாகவும், தன்னிடம் இருந்து மூன்று லட்சம் ரூபாய் பணம் வாங்கியதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தார்.
எனினும் நாஞ்சில் விஜயன் இதை மறுத்தார். அத்துடன் அவருடைய மனைவியும் மிகவும் உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர். தொடர்ச்சியாக மாறி மாறி இருவரும் தங்களுடைய வாக்குவாதங்களை பொது வெளியில் பகிர்ந்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் வைஷ்ணவி அமைதியானார்.
அதன்பின் வைஷ்ணவியின் நெருங்கிய தோழி அவர் பிக் பாஸ் சீசன் ஆரம்பமாகும் நேரத்தில் இப்படி ஏதாவது ஒரு பிரச்சினை பண்ணுவார் என்று தெரிவித்திருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. அதற்கு பிறகு நாஞ்சில் விஜயனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஒவ்வொன்றாக பதிவிறக்கி வருகிறார்.

இந்த நிலையில், நாஞ்சில் விஜயன் தன்னுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நாஞ்சில் விஜயன் வைஷ்ணவியின் தோளில் சாய்ந்து தூங்குகின்றார். தற்போது இந்த புகைப்படத்தை வெளியிட்டு மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் நாஞ்சில் விஜயன் வைஷுவுடன் அவ்வளவு நெருக்கமாக இருந்தார் என்று கேள்வி எழுப்பி, தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Listen News!