தமிழ் சினிமாவின் முக்கியமான மற்றும் மதிப்பிற்குரிய இயக்குநர்களில் ஒருவரான சேரன், சமீபத்தில் நேர்காணலில் மனக்குமுறலுடன் தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். குறிப்பாக, நடிகர் விஜய் சேதுபதி அவர் எழுதிய கதையில் நடிக்கவிருந்த நிலையில் கடைசி நேரத்தில் விலகிய சம்பவம் குறித்து பேசும்போது, சேரனின் வார்த்தைகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.

நேர்காணலில் சேரன், “விஜய் சேதுபதிக்காக நான் எழுதிய கதை, ரொம்ப முக்கியமான படம். அது இல்லங்கிறப்ப அவருக்கு ஒன்னும் பிரச்சனை கிடையாது. ஆனா எனக்கு அது பெரிய ஏமாற்றம்." எனக் கூறியிருந்தார்.
மேலும், "மனநிலை பாதிக்கப்பட்ட இடத்துக்குப் போய்ட்டேன். அதுல இருந்து மீண்டு வரவே ரொம்ப கஷ்டப்பட்டேன். ஒரு கதையை யோசிச்சு அதை எழுதி, அத டெவெலப் பண்ணி வைச்சா... அந்த கஷ்டத்தை உணராமல் ஒருத்தன் வந்து வேணாம்னு சொல்லிட்டுப் போறது கஷ்டமா இருக்கு. சினிமால கதையை நேசிச்சு வர்ரவங்க ரொம்ப கம்மியாகிட்டாங்க.." என்றார் சேரன்.

ஒரு பெரிய நட்சத்திரம் திடீரென விலகுவது எந்த இயக்குநருக்கும் பெரிய அதிர்ச்சி தான். ஆனால் சேரன் போன்ற ஆழமான கதைகளை உருவாக்கும் இயக்குநர்களுக்கு இது மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தற்பொழுது வைரலாகி வருகின்றது.
Listen News!