தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து வருகின்றன. இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான மூன்று படமும் 100 கோடி ரூபாய் வசூலித்து மிகப்பெரிய சாதனையை படைத்தது.
கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அந்த படத்தில் சின்ன கேரக்டரில் நடித்திருந்தார். அதற்கு பிறகு ஹீரோவாக அவர் நடித்த லவ் டுடே, டிராகன் மற்றும் டியூட் என மூன்று படங்களும் 100 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றியை பதிவு செய்தது.
இப்படி ஒரு சாதனையை எந்த ஹீரோவும் செய்ததில்லை என்று தான் சொல்ல வேண்டும். இது தமிழ் சினிமாவுக்கு மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவிலேயே முதல் முறை எனலாம். தற்போது 2கே கிட்ஸ்க்கு பிடித்த கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன் காணப்படுகின்றார்.

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படங்கள் வெற்றி பெறுவதற்கு காரணம் அவர் தற்போது ட்ரெண்டிங்கிற்கு ஏற்ற மாதிரி ரொமான்டிக் படங்களில் நடித்து வருவதும், காமெடி ஜானரில் தனது நடிப்பை எடுத்துக்காட்டுவதும், இறுதியாக எமோஷனல் காட்சிகளும் இடம் பிடித்து இருப்பதும் தான்.
இந்த நிலையில், பிரதிப் ரங்கநாதன் தனது நண்பரும் கோமாளி, லவ் டுடே, டிராகன் உள்ளிட்ட படங்களுக்கு இணை இயக்குனருமாக இருந்த ரமேஷ் நாராயணனுக்கு கார் ஒன்றை பரிசளித்துள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பிரதீப் ரங்கநாதனின் செயலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
Listen News!