பிரபல டிவி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ஒன்பதாவது சீசன், கடந்த சில வாரங்களாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் நடிகர் மற்றும் யூடியூப் பிரபலங்கள் கலந்துள்ள நிலையில், வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் சமீபத்தில் அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

திவாகர் பிக்பாஸ் வீட்டில் தனது எளிமையான பேச்சால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார். இந்நிலையில், யூடியூப் பிரபலமும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான ஜிபி முத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திவாகரின் வெளியேற்றத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் அதன்போது, "தர்பூசணி, உன்னை எங்கள் அண்ணன் விஜய் சேதுபதி இரண்டாக பிளந்துவிட்டாரா? வசமாக மாட்டினியா? ஆடிய ஆட்டம் என்ன?.. பேசிய பேச்சு என்ன?.. அட முட்டாப்பயலே இப்போ தெரியுதா மக்கள் ஒன்றும் சும்மா கிடையாது. நீ செய்யும் அனைத்தும் வெளியே வரும். நாம் தான் நடிக்கிறோம் என்று நினைக்கிறாய். உன் நடிப்பு எல்லாம் பிசுங்கி போச்சா... இப்போ தர்பூசணியை இரண்டாக வெட்டி ரோட்டில் வியாபாரம் செய்" எனக் கூறியுள்ளார்.

ஜிபி முத்துவின் இந்தக் கருத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலர் அவரது நேர்மையான விமர்சனத்தைப் பாராட்டி வருகின்றனர். திவாகரின் வெளியேற்றம் மற்றும் ஜிபி முத்துவின் கருத்துகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!