• Nov 19 2025

இயக்குநர் செல்வராகவனை சந்தித்த கணேஷ்.கே. பாபு... எதற்காகத் தெரியுமா.?

subiththira / 12 hours ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரைப்பட உலகில் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவர் கணேஷ்.கே. பாபு. இவரது படங்கள் அனைத்தும் சமூக சிக்கல்களை எடுத்துரைக்கக் கூடிய வகையில் காணப்படும். அத்தகைய இயக்குநர் தற்பொழுது இயக்குநர் செல்வராகவனை சந்தித்தது குறித்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். 


அதன்போது அவர், " சினிமா மீதான எனது கண்ணோட்டத்தை புதுப்பேட்டை படம் மாற்றியது. அது டாடா, கராத்தே பாபு போன்ற படங்களை இயக்குவதற்கும் உதவியது. நான் திரைத்துறைக்குள் நுழைய முக்கிய காரணங்களுள் செல்வராகவனும் ஒருவர். 

அவரை சந்தித்ததால் வாழ்க்கை நிறைவடைந்தது போல உணர்ந்தேன். " என இயக்குநர் செல்வராகவனை சந்தித்தது குறித்து மனம் திறந்து கதைத்துள்ளார் இயக்குநர் கணேஷ் கே பாபு. அவரது இந்தக் கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement