தமிழ் சினிமாவில் தொடர்ந்து குடும்ப ரசிகர்களுக்காக நகைச்சுவை கலந்த படங்களை வழங்கி வரும் இயக்குநர் பொன்ராம், தற்போது இயக்கி வரும் புதிய படம் “கொம்பு சீவி” குறித்த புதிய மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் அவரது மகன், இன்றைய தலைமுறையின் முன்னணி இசைப்புயல் யுவன் சங்கர் ராஜா, இருவரும் இணைந்து பாடிய ஒரு சிறப்பு பாடல் இடம்பெற்றுள்ளதாக தற்பொழுது தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த கூட்டணி எதிர்பாராதது மட்டுமல்லாமல், ரொம்பவே அரிதானதாக இருப்பதால், இது குறித்து ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து ஒரே பாடலில் குரல் கொடுத்திருப்பது தமிழ் சினிமாவில் மிகவும் அரிய சம்பவம். இவர்கள் இருவரும் இணைந்து பாடுவது ரசிகர்களுக்கு பெரும் வரம் என்றே சொல்லலாம்.
Listen News!