தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகையாகவும், தற்போது அரசியலிலும் செயற்பட்டு வரும் ரோஜா, நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசத்தைப் பற்றி தனது நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியில், அண்மையில் விஜய் தொடங்கிய த.வெ.க கட்சி மற்றும் அவரது அரசியல் திட்டங்கள் குறித்து பல முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

ரோஜா அதன்போது, “அரசியல் வந்த உடனே முதலமைச்சராகி கையெழுத்து போடணும்னா சினிமால தான் முடியும். நிஜ வாழ்க்கையில் முடியாது. அரசியலில் என்ன செய்யவேண்டும் என அவருக்குத் தெரிகிறது. மக்கள் அதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பது தேர்தலில் தான் தெரியவரும்.” என்று கூறியுள்ளார்.
நீண்ட நாட்களாகவே அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு உருவாகி, 2025-ல் அதிகாரபூர்வ அறிவிப்புடன் விஜய் அரசியலில் களமிறங்கினார். கல்வி, திறமையான ஆட்சி போன்ற கருப்பொருட்களை முன் நின்று பேசும் விஜயின் புதிய கட்சி, இளைஞர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆனால் ஒரு நட்சத்திரம் அரசியலுக்குள் வந்தாலே மக்கள் ஆதரவு தானாக உருவாகிவிடும் என்ற தவறான நம்பிக்கையை ரோஜா மறுத்துள்ளார். “திரையுலகின் வெற்றிகள் அரசியலில் வேலை செய்யாது. மக்கள் உணர்வுகளும், சமூக நலத் திட்டங்களும் தான் அரசியலில் ஒருவரை உயர்த்தும்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Listen News!