விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் தான் சாச்சனா. இவர் அந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்து தனது யதார்த்தமான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தார். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.
மகாராஜா படத்தில் சாச்சனா நடிப்பதற்கு முன்பே, ஆகஸ்ட் 16 1947 என்ற படத்தில் நடித்துள்ளார். எனினும் இவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்தது மகாராஜா திரைப்படம் தான். அதில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். ஆனால் அவர் நடிக்கும் போது அவருக்கு 21 வயது என்று பேட்டி ஒன்றில் கூறினார்.
இதை தொடர்ந்து ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப் படமும் அவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிஸியாக இருக்கும் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றார்.
இந்த நிலையில், நடிகை சாச்சனா தனது குடும்பத்தாருடன் புதிதாக கார் ஒன்றை வாங்கி இருக்கும் மகிழ்ச்சியான தகவலை வீடியோ உடன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த காரின் விலை 12 முதல் 14 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகின்றது. தற்போது சாச்சனாவுக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Listen News!