• Jan 19 2025

’அமரன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. ரஜினியின் ’வேட்டையன்’ படத்திற்கு செக் வைத்த கமல்ஹாசன்..

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் நடித்த ’அமரன்’ திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி புதிய போஸ்டர் உடன் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில், கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’அமரன்’. இந்தியாவிற்காக வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தான் அமரன்’ என்று இருக்கும் நிலையில் இந்த படம் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி திருநாளில் வெளியாகும் என்று சற்று முன்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

முன்னதாக அக்டோபர் 10ஆம் தேதி சூர்யா நடித்த ’கங்குவா’ திரைப்படம் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் இரண்டு வாரம் கழித்து ’அமரன்’ திரைப்படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் அதே தேதியில் தான் ’கங்குவா’ வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து ’கங்குவா’ படத்துடன் மோத விரும்பாத ’வேட்டையன்’ திரைப்படத்தை தீபாவளி அன்று ரிலீஸ் செய்ய லைகா நிறுவனம் திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது கமல்ஹாசன் அதற்கு செக் வைத்து ‘அமரன்’ படத்தை தீபாவளி ரிலீஸ் என்று அறிவித்துள்ளதை அடுத்து ’வேட்டையன்’ தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மொத்தத்தில் ’வேட்டையன்’ திரைப்படம் இந்த இரண்டு படங்களில் எந்த படத்தோடு மோதும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement