• Jul 22 2026

நடிகர் கார்த்தியின் 27வது படம் என்ன தெரியுமா? எப்போது ரிலீஸ் தெரியுமா? முழு விபரம் இதோ

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் கார்த்தி. இவர் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஜப்பான். இந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. அதனால் தோல்வி அடைந்தது.

இதைத்தொடர்ந்து நலன் குமாரசாமி உடன் படம் ஒன்றில் கமிட்டான கார்த்தி, அதைத் தொடர்ந்து 96 பட புகழ் பிரேம்குமார் இயக்கும் படத்திலும் நடித்துள்ளார்.

கார்த்தியின் 27 வது படமான இந்த படத்துக்கு மெய்யழகன் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட்  நிறுவனம் தயாரிக்கின்றது. இந்த படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கேரக்டரில் நடிக்கின்றாராம்.


இந்த நிலையில், நடிகர் கார்த்தி நடிக்கும் மெய்யழகன் திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீதிவ்யா நடிக்கின்றார். தற்போது கார்த்தி ’சர்தார் 2’ படத்தில் நடித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement