பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, பாக்கியா ரெஸ்டாரெண்டுக்கு வந்து நிற்க சுதாகரின்ட மனேஜர் வெளியாட்கள் யாரையும் உள்ள வரவேணாம் என்று சொன்னதாகக் கூறுகின்றார். அதைக் கேட்ட பாக்கியா நான் உங்க ரெஸ்டாரெண்ட அபகரிக்க ஒன்னும் வரேல என்னோட பொருள் உள்ள இருக்கு அத எடுக்கத் தான் வந்தேன் என்கிறார். அதுக்கு மனேஜர் கொஞ்சம் பொறுங்க நான் சுதாகர் சாரிட்ட கேட்டுச் சொல்லுறன் என்கிறார். அதனை அடுத்து செல்வி அக்கா உன்ன உள்ள விடுறதுக்கு யாருகிட்டையோ போன் பண்ணிக் கேக்கவேணுமா என்கிறார்.
அதைத் தொடர்ந்து எழில் பாக்கியாவப் பாத்து ஏன் இங்க வந்து நிக்கிற என்று கேக்கிறார். அதுக்கு பாக்கியா கொஞ்ச பொருட்கள் எடுக்கனும் அதுதான் வந்தனான் என்கிறார். இதனை அடுத்து மனேஜர் பாக்கியா கிட்ட வந்து சுதாகர் சார் உங்கள உள்ள விட வேணாம் என்றதாகச் சொல்லுறார். அதைக் கேட்ட எழில் எங்க அம்மாட ரெஸ்டாரெண்டுக்க அவங்களே போக கூடாதா என்று கோபமாக கேக்கிறார்.
அதனை அடுத்து பாக்கியாவோட மாமாட போட்டோவ வெளில தூக்கிப் போடுறதப் பாத்த பாக்கியா ரொம்பவே கவலைப்படுறார். பின் எழில் இவங்களுக்கு ஏதாவது ஒன்னு செய்யவேணும் என்று சொல்லுறார். இதைத் தொடர்ந்து பாக்கியா சுதாகர் வீட்ட போய் இன்னும் என்ன எல்லாம் செய்யப்போறீங்க என்று கேக்கிறார். இதைக் கேட்ட சுதாகர் நான் உங்கள நேற்றே ரெஸ்டாரெண்ட விட்டுப் போகச்சொன்னேன் நீங்க ஏன் பிறகு அங்க போனீங்க என்று கேக்கிறார்.
இதைத் தொடர்ந்து சுதாகர் கொஞ்சம் கூட மரியாதை இல்லாம கதைக்கிறீங்க சம்மந்தி என்று சொல்லுறார். பின் எழில் வீட்ட வந்து எல்லாருக்கும் ரெஸ்டாரெண்டில நடந்த எல்லாத்தையும் சொல்லுறார். அதைக் கேட்ட ஈஸ்வரி ரொம்பவே கவலைப்படுறார். இதனை அடுத்து சுதாகர் அடுத்த ரெஸ்டரெண்ட வாங்குவதற்கு பிளான் பண்ணுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!