தமிழ் சினிமாவின் மிகவும் அழகான ஜோடியாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் ஷாலினி. இவர்கள் "அமர்க்களம்" படத்தின் மூலம் ஜோடியாக நடித்த போது காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நேற்றைய தினம் அவர்களது 25வது திருமண நாளை கொண்டாடி உள்ளனர். இதனை ஷாலினி தனது இன்ஸ்டாப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் அஜித் மற்றும் ஷாலினி தங்களது திருமண விழாவினை மிகவும் எளிமையான முறையில் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் படங்கள், ரேஸ் மற்றும் புகைப்படக் கலைஞர் என வலம்வரும் அஜித் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதைப் பார்த்த ரசிகர்கள் "ஓர் நடிகன் என்றால் இப்படி எல்லோ இருக்க வேணும் .."என்று கருத்துத் தெரிவித்து வருகின்றனர் .
Listen News!