பிரபல நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் சமீபத்தில் தி மு க கட்சியில் இணைந்து சமூக சேவைகளை ஆற்றி வருகின்றார். அண்மையில் தனது சைக்கிளில் கட்சி கொடியை வைத்து எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகியது.
இந்த நிலையில் தற்போது தி மு க மேடையில் " எனக்கு அஜித் சாரை பிடிக்கும். நான் அவர் கூட போய் ஒரு போட்டோ எடுத்துட்டு நாளைக்கு கொடூரமா கேவலமா ஒரு விஷயம் பண்ணா நீங்க தாராளமாக என்னை அரெஸ்ட் பண்ணலாம். ஆனா நீங்க அஜித் சார் கிட்ட போய் சார் நீங்க தான் தப்பு பண்ணீங்களானு அவரை கேட்க கூடாது. ஏனென்றால் அவர் ஒரு பிரபலம். அதே மாதிரி எங்க கட்சிக் கொடியை கார்ல வச்சிட்டு ஒருத்தர் தப்பு பண்ணா அவங்க பண்ற தப்புக்கு எல்லாம் நாங்க தான் காரணம்னு நினைச்சீங்கன்னா அது முதிர்ச்சியற்ற விஷயம் " என கூறியுள்ளார். தற்போது இவரது பேச்சு இணையத்தில் செம வைரலாகி வருகின்றது.
Listen News!