முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வரும் "ரெட்ரோ" படத்தினை தொடர்ந்து சூர்யா rj பாலாஜி இயக்கத்தில் மற்றும் லக்கி பாஸ்கர் இயக்குநர் வெங்கி அட்லூரி படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார்.
இதைவிட 2019 ஆம் ஆண்டு கமிட்டாகிய வெற்றிமாறன் இயக்கவுள்ள "வாடிவாசல் " படத்தின் வேலைகள் இந்த ஆண்டு ஆரம்பமாகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இவர் இந்த படத்தில் நடிக்க ஒத்து கொண்டு தற்போது 5 ஆண்டுகள் ஆகும் நிலையில் அதற்கு முன்னர் சூர்யா தனது சம்பளத்தை 30 கோடியாக கேட்டிருந்தார்.
ஆனால் தற்போது சூர்யாவின் சம்பளம் இருமடங்காகி 60 கோடியாக உயர்ந்துள்ளமையினால் இதன் பின்னர் இவர் "வாடிவாசல் " படத்தில் நடிப்பதற்காக தனது சம்பளத்தை அதிகம் கேட்பாரா? இல்லையா? எனும் கேள்வி சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளது.
Listen News!