• Sep 10 2024

சூப்பர் ஸ்டார் ரஜினி சகோதரர் நடிக்கும் படம்.. இலங்கை இயக்குனருக்கு அதிர்ஷ்டம்..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சகோதரர் சத்யநாராயணா ராவ், இலங்கை இயக்குனர் திரைப்படத்தில் நடித்துள்ளதாகவும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது அவர் கூறிய தகவல் அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஏஆர் ரசிம் என்பவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’மாம்பழ திருடி’. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்த நிலையில் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சகோதரர் சத்யநாராயணா ராவ் நடித்துள்ளார் என்ற தகவல் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய போது ’சத்யநாராயணா அவர்களை நடிக்க வைக்க ஏற்கனவே பல இயக்குனர்கள் முயற்சி செய்ததாகவும் ஆனால் அவர்களுக்கெல்லாம் அவர் நோ சொல்லிவிட்டார் என்றும் தெரிவித்தார். என்னுடைய படத்தில் நடிக்க அவரிடம் நான் பேச்சுவார்த்தை நடத்திய போது கூட நோ என்றுதான் சொன்னார், ஆனால் நான் கதையைச் சொன்ன போது அந்த கதை அவரை இம்ப்ரஸ் ஆக்கியதால் உடனே நடிக்க ஒப்புக்கொண்டார் என்று தெரிவித்தார்.



பெண்களின் பாதுகாப்பு குறித்த சட்டங்களை பேசும் இந்த படம் பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக இருக்கிறது என்பதால் தான் சத்யநாராயணா ராவ் அவர்கள் நடிக்க ஒப்புக்கொண்டார் என்றும் அவர் எனது படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது கடவுள் எனக்கு  கொடுத்த பரிசாகவே நான் பார்க்கிறேன்’ என்றும் தெரிவித்தார்.

இந்த படத்தில் நடிப்பதற்காக அவர் சம்பளம் எதுவும் பெற்றுக் கொள்ளவில்லை என்றும் அது மட்டும் இன்றி அவர் தான் தன்னுடைய கைக்காசை எங்களுக்காக செலவு செய்தார் என்றும் அவர் கூறியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement