• Jan 18 2025

பிக்பாஸ் தொகுப்பாளர் பட்டியலில் பார்த்திபன்? அய்யய்யோ வேண்டாம் என அலறிய ரசிகர்கள்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக கமல்ஹாசன் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் அவருக்கு பதில் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் ஊடகங்களில் பிக்பாஸ் தொகுப்பாளர் குறித்து பல செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பிக் பாஸ் தமிழ் 8வது சீசனை சூர்யா, விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ், அரவிந்த்சாமி, ரம்யா கிருஷ்ணன், சிம்பு உள்பட பல நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் விஜய் டிவி தரப்பில் இருந்து இது குறித்து எந்த விதமான அதிகாரபூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் தற்போது திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பட்டியலில் பார்த்திபன் இணைந்துள்ளதை அடுத்து நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பார்த்திபன் சாதாரணமாக மேடைப்பேச்சு பேசும்போதே வித்தியாசமாக பேசுகிறேன் என்று கடுப்பேத்துவார் என்றும் தயவுசெய்து அவரை மட்டும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அனுமதிக்க வேண்டாம் என்றும் கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் கவிதை நயத்துடன் பார்த்திபன் பேசுவார் என்றும் நிகழ்ச்சியை இதுவரை இல்லாத அளவு வித்தியாசமாக கொண்டு செல்வார் என்றும் அவர் இந்த நிகழ்ச்சிக்கு பொருத்தமானவர் தான் என்றும் ஒரு சிலர் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர். பார்த்திபன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் எப்படி இருக்கும் என்பதை கமெண்ட் பகுதியில் பதிவு செய்யுங்கள்.

Advertisement

Advertisement