• Jun 30 2024

நடுரோட்டில் அசிங்கப்பட்ட கோபி... பொடி வைத்து பேசும் ராதிகா..! ட்ரிப் போகும் ஈஷ்வரி

Aathira / 3 days ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், கோபி குடித்துவிட்டு வர ராதிகாவும் கமலாவும் அவரை கண்டபடி திட்டுகின்றார்கள். மேலும் உங்கள நம்பி வந்ததுக்கு எனக்கு இதுவும் வேணும் என்று சொல்லி, நீங்க உங்க அம்மா கூடவே இருங்க நான் தனியாவே இருக்கிறேன் என சொல்லிவிட்டு செல்கிறார் ராதிகா.

இதை தொடர்ந்து பாக்கியாவும் ராமமூர்த்தியும் வார்க்கிங் வந்து கொண்டிருக்க, வழியில் கோவிபியை காணுகிறார்கள். இதன்போது ராமமூர்த்தி ஈஸ்வரியை இப்படி பண்ணிட்டியே என்று ரோட்டில் வைத்து எல்லார் முன்னாடியும்  கண்டபடி அவமானப்படுத்துகின்றார். அங்கு ஆட்கள் கூடவும் பாக்கியா வாங்க மாமா போகலாம் என அவரை அழைத்துக்கொண்டு செல்கிறார்.

அதன்பின்பு பாக்கியா,  ஈஸ்வரியை கும்பகோணம் போவதற்கு அழைக்க, அவர் வரவில்லை என சொல்லுகிறார். ஆனாலும் அதற்குப் பிறகு பாக்யா அவரை கூட்டிக்கொண்டு இனியா  ராமமூர்த்தி உடன் கும்பகோணத்திற்கு செல்கின்றார்கள்.


இதை பார்த்த கோபி அம்மா எங்கே போகிறா? என வாசலில்  செழியனும் எழிலும் நிக்க கேட்கின்றார். அதற்கு எழில் கோபிக்கு  திட்டுகிறார். ஆனால் செழியன் எழிலை உள்ள போக சொல்லிவிட்டு பாட்டி கும்பகோணம் போகிறார் என்று கோபத்தில் சொல்லிவிட்டு அவரும் கிளம்பி செல்கிறார்.

இதையடுத்து வீட்டுக்கு வந்த கோபி ஈஸ்வரியை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்க, ராதிகா பைலுடன் எங்கேயே புறப்பட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது எங்க போற ஆபீஸுக்கா? எனும் இரண்டு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு போ அப்படின்னு கோபி சொல்லிக் கொண்டிருக்க ராதிகா பதில் எதுவும் சொல்லாமல் காருக்கு புக் பண்ணுகின்றார்.

அவருக்கு பின்னாடியே மையுவும் கமலாவும் ரெடி ஆகி வர மூன்று பேரும் எங்க போறீங்க என கேட்டுக் கொண்டிருக்க, நீங்க போற இடம் சொல்லிட்டு போறீங்க? செய்றதெல்லாம் சொல்லுறீங்களா என பொடி வைத்துப் பேசுகிறார் ராதிகா இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement