• Jun 30 2024

ரஜினியை வைத்து ‘இந்தியன் 2’ படத்தின் புரமோஷனா? நெட்டிசன்கள் கிண்டல்..!

Sivalingam / 3 days ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான ’இந்தியன் 2’ திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் கூட மும்பையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி மற்றும் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தாலும் இந்த படம் குறித்த செய்திகள் ஊடகங்களில் பரபரப்பாக வெளியாகவில்லை என்பது படக்குழுவினர்களுக்கு அதிருப்தியாக உள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக சமூக வலைதளங்களில் எங்கு பார்த்தாலும் ’கல்கி 2898 ஏடி’ படத்தின் செய்திகள் தான் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்றும் ’இந்தியன் 2’ படத்திற்கு சிறப்பாக ப்ரமோஷன் செய்தும் இந்த படத்திற்கு பெரிய அளவில் ஹைப் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



இந்த நிலையில் தான் திடீரென படக்குழுவினர் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு மற்றும் ’வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு   ஒரே இடத்தில் நடந்த போது கமல் மற்றும் ரஜினி இணைந்து எடுத்த புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படம் எடுத்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகி உள்ள நிலையில் தற்போது இந்த படத்தை வெளியிட என்ன காரணம் என்று நெட்டிசன்கள் அலசி ஆராய்ந்து வருகின்றனர். ’இந்தியன் 2’ படத்திற்கு பெரிய அளவில் ஹைப் இல்லை என்பதால் ரஜினியை வைத்த ப்ரோமோஷன் செய்யப்படுகிறதா என்றும் கூறப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் எதிர்பார்த்தது போலவே இந்த ஐடியா சக்சஸ் ஆகிவிட்டதாகவும், ரஜினியுடன் இருக்கும் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ கேரக்டர் கெட்டப் இப்போது வைரலாகி வருவதாகவும், ஒரு ப்ரமோஷன் நிகழ்ச்சி தராத விளம்பரத்தை ரஜினியுடன் இருக்கும் இந்த ஒரே ஒரு ஸ்டில் ஹைப்பை கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement