• Jun 30 2024

கமல்ஹாசன் மட்டுமல்ல, இந்த 5 பிரபலங்களும் சிறப்பு தோற்றம்.. ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் புதிய தகவல்..!

Sivalingam / 3 days ago

Advertisement

Listen News!


பிரபாஸ் நடித்த ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தில் கமல்ஹாசன் 19 நிமிடங்கள் மட்டும் வரும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார் என்பதும் அவருடைய காட்சிகள் படத்தில் சூப்பராக இருப்பதாகவும் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசன் மட்டுமின்றி மேலும் 5 பிரபலங்கள் இந்த படத்தின் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக படம் பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த படத்தின் முக்கிய கேரக்டர்களில் துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா, நானி மற்றும் மிருணாள் தாக்கூர் ஆகிய ஐந்து பிரபலங்கள் முக்கிய காட்சிகளில் நடித்துள்ளதாகவும் அவர்களது காட்சிகள் படத்தின் வெற்றிக்கு வலு சேர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் படம் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



ஆனால் அதே நேரத்தில் இது ஒரு ஒரிஜினல் தெலுங்கு படம் என்பதால் 4 தெலுங்கு பிரபலங்கள் இந்த படத்தின் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாகவும், மலையாள பிரபலமான துல்கர் சல்மான் நடித்துள்ளதாகவும்,  இதனால் மற்ற மொழி ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

குறிப்பாக  தமிழ் ரசிகர்களை பொறுத்தவரை கமல்ஹாசன் காட்சிகள் திருப்தியாக இருந்தாலும் சிறப்பு தோற்றத்தில் வேறு ஒரு பிரபல நடிகரை நடிக்க வைத்திருக்கலாம் என்றும் ஆனால் படக்குழுவினர் அதை செய்யவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

Advertisement

Advertisement