• Jan 22 2025

புஷ்பா 2 எந்த ஓடிடியிலும் வெளியாகாது.! தயாரிப்பு நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு.!

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா படம் வெளியானது. இந்த படத்தின் இரண்டாவது பாகம் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழித்து கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் தேதி வெளியானது.

புஷ்பா 2 திரைப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படம் வெளியாகி இதுவரையில் 1508 கோடிகளை வசூலித்துள்ளது.

d_i_a

இதை தொடர்ந்து புஷ்பா 2 திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி முதல் ஓடிடியில் வெளியாக உள்ளதாக இணையதள பக்கங்களில் தகவல்கள் பரவியது. ஆனால் அதற்கு பட குழுவினர் தற்போது விளக்கம் அளித்து உள்ளனர்.


இது தொடர்பில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், புஷ்பா 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றி வதந்திகள் பரவிக் கொண்டுள்ளன. இந்த விடுமுறை சீசனில் புஷ்பா 2 படத்தை திரையரங்குகளில் கண்டு ரசியுங்கள். 56 நாட்களுக்கு படம் எந்த ஓடிடியிலும் வெளியாகாது என  தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தகவல் வைரலாகி வருகின்றது.

இதே வேளை புஷ்பா 2 திரைப்படம் கோடி கோடியாக வசூலை வாரி குவித்த போதும் இந்த படத்தை பார்க்கச் சென்று உயிரிழந்த பெண் மற்றும் அவருடைய மகன் மூளைச்சாவடைந்த விடயமும் சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement