• Dec 21 2024

இட்லி கடைக்கு வந்த சோதனை.? பின்வாங்கும் தனுஷ்.! காரணத்தை போட்டுடைத்த அந்தணன்

Aathira / 9 hours ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷின் 52 வது படம் ஆக இட்லி கடை படம் அமைந்துள்ளது. இது தொடர்பிலான அறிவிப்பு, போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பவர்பாண்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தான் தனுஷ். இவர் தனது 50வது படமான ராயன் படத்தையும் அவரே இயக்கி நடித்து இருந்தார். இந்த படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி இருந்தது.

இதைத் தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கி முடித்துள்ளார். மேலும் தனது 52 வது படமான இட்லி கடை என்ற படத்தையும் தானே இயக்கி நடிக்கின்றார். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இதற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கின்றார்.

d_i_a

இந்த நிலையில், இட்லி கடை திரைப்படம் எதிர்வரும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாகவும், ஆனால் அதில் மிகப்பெரிய குழப்பம் இருப்பதாகவும் வலைப்பேச்சு அந்தணன் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.


மேலும் அவர் தெரிவிக்கையில், இட்லி கடை படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக் கட்டத்தை நெறுங்கி உள்ளன. இந்த படத்தை ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீஸ் செய்வதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்கள். ஆனால் ஏப்ரல் மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்யலாமா? வேண்டாமா? என்ற தயக்கமும் அவர்களிடம் உள்ளது.  

அதற்குக் காரணம் என்னவென்றால் அந்த மாதத்தில் நிறைய தெலுங்கு படங்கள் ரிலீஸ் ஆகுது. இதை எண்ணித் தான் தமிழ் படங்கள் பின்வாங்கி தயங்கி உள்ளன. 

ஏன் என்றால் அந்த மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்தால் நமக்கு ஆந்திரா, தெலுங்கானா போன்ற இடங்களில் உள்ள திரையரங்குகள் கிடைக்காது. அதனால் இந்த தமிழ் புத்தாண்டுக்கு நம்ம படங்களை ரீலிஸ் செய்வதா? இல்லையா? என்ற பெரும் குழப்பத்தில் தமிழ் சினிமா உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement