• Jan 19 2025

தயாரிப்பாளரிடம் ரூ.6 கோடி கேட்டு மிரட்டினாரா பிரபல நடிகை? பாய்ந்தது அவதூறு வழக்கு..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

என்னிடம் 6 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாக பிரபல தயாரிப்பாளர் ஒருவர் நடிகை மீது குற்றம் சாட்டிய நிலையில் அந்த தயாரிப்பாளர் மீது நடிகை அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வழியாக உள்ளது.

பாலிவுட் திரையுலகின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மணிஷ் ஹரிசங்கர் என்பவர் ‘ஷோ ஸ்டாப்பர்’ என்ற வெப் தொடரை இயக்கியுள்ள நிலையில் அந்த தொடரில் நடிகை திகங்கனா சூர்யவன்ஷி என்பவர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இவர் ஹரிஷ் கல்யாண் நடித்த ’தனுசு ராசி நேயர்களே’ என்ற படம் உட்பட சில படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த தொடர் உருவாகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் வியாபாரம் ஆகாத நிலையில் இந்த  தொடரை அக்சய்குமாரை வைத்து  விளம்பரப்படுத்தி தருகிறேன், அதற்காக எனக்கு 75 லட்சம் ரூபாய், விளம்பரம் செய்யும் அக்ஷய் குமாருக்கு ரூ.6 கோடி தர வேண்டும் என்று கூறியதாகவும் அதற்கு தயாரிப்பாளர் வேண்டாம் என்று கூற ஒரு கட்டத்தில் அவர் ஆறு கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாகவும் தயாரிப்பாளர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகை திகங்கனா, ‘மனிஷ் ஹரிசங்கர் கூறியது எல்லாம் பொய் என்றும், அவரது வெப் தொடர் வியாபாரம் ஆகவில்லை என்பதால் விளம்பரத்திற்காக என்னுடைய பெயரை தவறாக பயன்படுத்துகிறார் என்றும் அவர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப் போகிறேன்’ என்று கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement