கரூரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற த.வெ.க பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட பரிதாபமான கூட்ட நெரிசல் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிகழ்வில் 41 பேர் உயிரிழந்தனர் என்றும், பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில், த.வெ.க தலைவர் விஜய், சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க விரும்பியபோது காவல்துறை அனுமதி மறுத்ததாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், விஜய்க்கு பாதுகாப்பு அளித்து கரூர் மருத்துவமனையில் உள்ள பாதிக்கப்பட்டோரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரி, த.வெ.க நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகியுள்ளன.
Listen News!