உலகநாயகன் கமல்ஹாசன் உடன் மோத துணிந்து நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் உலக நாயகன் தரப்பினர் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.
கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான ’இந்தியன் 2’ திரைப்படம் வரும் 12ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு அதற்கான விளம்பர பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்தது.
இந்த நிலையில் ஜூலை 12ஆம் தேதி வேறு எந்த படங்களும் வெளியாகாததால் ’இந்தியன் 2’ திரைப்படம் சோலோவாக வெளியாகும் என்றும் அதனால் அந்த படம் மிகப்பெரிய ஓப்பனிங் வசூலை வாரி குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் அதிரடியாக நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் தனது ’டீன்ஸ்’ படத்தை அதே ஜூலை 12ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார். இது ’இந்தியன் 2’ படக்குழுவினர் மத்தியில் குறிப்பாக கமல்ஹாசன் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பார்த்திபனின் ’டீன்ஸ்’ திரைப்படம் முற்றிலும் புதுமுகங்கள் மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் நடித்த ஒரு சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் அந்த படம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த மாதங்களாக ’டீன்ஸ்’ படத்திற்கு மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த படம் தற்போது ’இந்தியன் 2’ படத்துடன் திடீரென மோத முடிவு செய்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒருவேளை ‘இந்தியன் 2’ படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களும் ’டீன்ஸ்’ படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்களும் கிடைத்தால் ஒரு பெரிய பட்ஜெட் படத்தை ஒரு சின்ன பட்ஜெட் படம் அடித்து நொறுக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால் ’இந்தியன் 2’ படக்குழுவினர் பார்த்திபன் மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
Listen News!