• Jul 05 2024

முன்னாள் அமெரிக்க அதிபரை அடிக்க கை ஓங்கும் விஜய் டிவி புகழ்.. அதிர்ச்சி வீடியோ..!

Sivalingam / 2 days ago

Advertisement

Listen News!

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களை விஜய் டிவி புகழ் அடிக்க ஓங்குவது போன்ற வீடியோ அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் டிவியில் உள்ள பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட புகழ் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானார் என்பதும் அதன் பின்னர் அவருக்கு தற்போது சினிமா வாய்ப்புகளும் அதிகரித்து வருகிறது என்பதும் சில படங்களில் ஹீரோவாகவும் அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவ்வப்போது புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோக்களை பதிவு செய்து வரும் நிலையில் தற்போது அவர் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  பொம்மையை நாற்காலியில் உட்கார வைத்து அவருடன் பேசும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

டொனால்ட் டிரம்ப் தனது பிசினஸ் பார்ட்னர் என்றும், இனிமேல் உன்னுடன் பிசினஸ் செய்ய எனக்கு விருப்பமில்லை, எனக்கு செட்டில் பண்ணி விடு, என்னுடைய நம்பரை பிளாக் செய்துவிடு என்று அவரை அடிக்க கை வாங்குவது போன்ற காட்சியும் அந்த வீடியோவில் உள்ளது.

காமெடியாக உருவாக்கப்பட்ட இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. மேலும் உங்களை ’மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை’ நிகழ்ச்சியில் எதிர்பார்த்தேன், நீங்கள் ஏன் வரவில்லை என்றும் பல ரசிகர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில் அதற்கு இதுவரை புகழ் பதில் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement