• Jun 27 2024

ஜீ தமிழ் சீரியலுக்கு தாவிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை! எந்த சீரியல் தெரியுமா?

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலின் முதலாம் பாகம் நிறைவுற்ற நிலையில் இதன் இரண்டாம் பாகம் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றது.

பாண்டியன் ஸ்டோர் முதலாவது பாகத்தில் அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான பாசப்பிணைப்பை வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டது. தற்போது இதன் இரண்டாம் பாகத்தில் அப்பா மகன்களுக்கு இடையிலான பாசமும், வீட்டிற்கு வரும் மருமகளால் ஏற்படும் சம்பவங்கள் பற்றியும் கொண்டு  அமைந்துள்ளது.

இந்த சீரியல் பிற மொழிகளில் ரீமேக் இல்லாமல் தமிழிலேயே உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த சீரியல் ஏனைய மொழிகளில் ரீமேக் ஆனது என்ற பெருமையை பெற்றது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.


இதில் மிகவும் ஹிட்டான கேரக்டர் என்றால் அது முல்லைத்தான். ஆரம்பத்தில் முல்லை கேரக்டரில் சித்ரா நடித்து வந்தார். அதற்குப் பிறகு காவியா நடிக்க, இறுதியாக அந்த கேரக்டரில் லாவண்யா நடித்தார்.

எனினும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிந்ததும் வேற எந்த சீரியல்களும் ஆர்வம் காட்டவில்லை லாவண்யா. ஆனால் அடிக்கடி போட்டோ ஷூட் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார்.


இந்த நிலையில், தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நினைத்தாலே இனிக்கும் சீரியலில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளாராம் லாவண்யா. இதைக் கேட்ட  ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருவதோடு முழு நேரமாகவே வந்து நடியுங்கள் என  கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.

இதேவேளை விஜய் டிவியில் பிரபலமாக காணப்பட்ட லாவண்யா, தற்போது ஜீ தமிழ் சீரியலில் கமிட்டாகி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement